2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அளுத்கமையில் இடம்பெற்றது இனவாத அடக்குமுறை: ரவிகரன்

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அளுத்கம தர்கா நகரில் நடைபெற்ற தாக்குதலானது இனவாத அடக்குமுறையின் அடுத்த அத்தியாயமே' என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதன்கிழமை (18) தெரிவித்தார்.

இது தொடர்பாக ரவிகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

' இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான அடக்குமுறைகளுக்கெதிராக எங்களின் குரல் என்றும் ஒலிக்கும்.

தமிழ்த்தேசிய பாதையில் உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இஸ்லாமியத் தலைமைகளும் எம்முடன் ஒன்றிணைந்து திரண்ட சக்தியாக போராடுவதே எம்மீதான அடக்குமுறைகளை வீழ்த்துவதற்கான தகுந்த வழியாகும்.

இஸ்லாமியர்களுக்கெதிராக அளுத்கம தர்கா நகரில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து இலங்கையில், பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டிடங்களும் தாக்கப்படுதல் இனவாத அடக்குமுறையின் அடுத்த அத்தியாயமாகவே அமைகிறது.

காலங்காலமாக தமிழர்களுக்கு எதிராகவும் பௌத்தம் தவிர்ந்த மதங்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகள் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

இவ்வாறான அடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது, இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழித்து வருவதையே வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கடும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் சகோதரர்களுக்காக எமது குரல் வலுவாக ஒலிக்கும் என்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக முஸ்லீம் அரசியல் தலைமைகள் எவ்வாறு செயற்படப்போகிறார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்தும் பதவிகளுக்காக தமது மக்களின் உரிமைகளை அவர்கள் பணயம் வைப்பார்களா என்கிற கேள்வி தற்போது எழுகின்றது.

தமிழ்த் தேசிய பாதையில் உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இஸ்லாமியத் தமிழர்களும் தலைமைகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். நாம் திரண்ட சக்தியாக போராடுவதே எம்மீதான அடக்குமுறைகளை வீழ்த்துவதற்கான தகுந்த வழியாகும். அதுவே எதிர்காலத்தில் எம்முடைய நிலையான இருப்பையும் உறுதிப்படுத்தும்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .