2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா, யோ.வித்தியா


யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி வாரத்தினை ஒட்டி சுகாதார நடவடிக்கைகளை விழிப்புணர்வூட்டும் வகையிலான ஊர்வலம் யாழ்.மாநகர சபை முன்றலில் இருந்து மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் வியாழக்கிழமை (19) ஆரம்பமாகியது.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் யாழ்.பொதுநூலகத்தினைச் சென்றடைந்தது. 

மாநகர சபையின் உள்ளுராட்சி வார தினத்தினை அனுஷ;டிக்கும் விதமாக இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் சுற்றுச்சூழலைப் மதிப்போம், பாதுகாப்போம், பசுமையான உலகை உருவாக்குவோம், தொற்றுநோயினைத் தவிர்ப்போம், பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதினைத் தவிர்ப்போம், நகரைச் சுத்தம் பேண ஒன்றிணைந்து செயற்படுவோம் மற்றும் ஒற்றுமையாக வாழ்வோம் உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய சுலோகங்களை தாங்கியவாறு சென்றனர்.

இதில் யாழ்.மாநகர சபை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .