2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கோவில் மாட்டினைத் திருடிய நால்வர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி தீத்தாங்குளம் பிள்ளையார் கோவில் முன்றலில் கட்டப்பட்டிருந்த கோவில் பசு மாட்டினையும் அதன் கன்றினையும் திருடிய குற்றச்சாட்டில் நால்வரை அச்சுவேலி இடைக்காட்டுப் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (19) மாலை கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.சமன்ஜெயசிங்க வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.

குறித்த நபர்கள் பசு மாட்டினை பிறிதொரு நபரிற்கு விற்பனை செய்துள்ளதுடன், அதன் கன்றினை இறைச்சியாக்கா வெட்டியுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அச்சுவேலி பாரதி பகுதியினைச் சேர்ந்த இரத்தினப்பிள்ளை சந்திரகுமார் (40), இடைக்காடு பகுதியினைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை பிரதீபன் (37), தம்பாளையினைச் சேர்ந்த நல்லையா கணேசலிங்கம் (50), சந்நிதி வீதியினைச் சேர்ந்த எஸ்.சந்திரலிங்கம் (55) ஆகிய நால்வருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

பசு மாட்டினையும் அதன் கன்றினையும் காணவில்லையென ஆலயக் குருக்களினால்   வியாழக்கிழமை (19) அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கோவில் முன்றலில் புதன்கிழமை (18) கட்டப்பட்டிருந்த மேற்படி பசுவும், கன்றும் வியாழக்கிழமை (19) காலை வந்து பார்த்த போது காணாமற்போயிருந்ததாக குருக்கள் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .