2025 ஜூலை 02, புதன்கிழமை

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


கைதடி மக்கள் நலன் பேணும் நட்புறவுக் கழகத்தால், கைதடி பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு தலா 1150 ரூபா வீதம் கற்றல் உபகரணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை வழங்கப்பட்டன.

கைதடி மத்தி வளர்மதி நிலைய அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த கற்றல் உபகரணங்களுக்கான நிதியுதவியை கைதடியைச் சேர்ந்த கனடா வாழ் நலன்விரும்பி ஒருவர் வழங்கியிருந்தார்.

இந்த உபகரணங்கள் வழங்குதற்காக, கைதடி பிரதேசத்திலுள்ள வளர்மதி சனசமூக நிலையம், நவ சனசமூக நிலையம், கைதடி தெற்கு சனசமூக நிலையம், சரஸ்வதி சனசமூக நிலையம், செல்வா சனசமூக நிலையம், நாவற்குழி சனசமூக நிலையம், உதயதாரகை சனசமூக நிலையம் ஆகிய 7 சனசமூக நிலையங்களிலுமிருந்து தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .