2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 23 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நெல்லியடிப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூன்று நபர்களை திங்கட்கிழமை (23) கைது செய்ததாகக் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் பேருந்து ஒன்றில் கொடிகாமம் நோக்கி வந்துகொண்டிருப்பதாக நெல்லியடிப் பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பேருந்தினை மறித்து மூவரையும் கைது செய்ததாகப் கொடிகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் துன்னாலை கிழக்கு, கரவெட்டி மற்றும் வேம்படி ஆகிய பகுதிகளினைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குழுமோதல், ஆட்களை  அடித்துக் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குறித்த நபர்கள் நெல்லிடியப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .