2025 ஜூலை 02, புதன்கிழமை

சிறந்த ஆலோசனைகளின் ஊடாகவே நடுத்தர கைத்தொழில்களை முன்னேற்ற முடியும்

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவீன தொழில்நுட்பம் மட்டுமல்லாது சிறந்த வழிகாட்டல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைவாகவே சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேலும் வளர்த்தெடுக்க முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் திங்கட்கிழமை(23) இடம்பெற்ற யாழ். மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற் துறையை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஒரு பிரதேசத்தினதோ அல்லது மாவட்டத்தினதோ அபிவிருத்தி என்பது அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை பொறுத்து அமைந்துள்ளது.

அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் பல்வேறுபட்ட சிறுதொழில் முயற்சியாண்மை கிராமங்கள் நிறுவப்பட்டு அவை சிறப்புடன் இயங்கி வருகின்றன. இருந்த போதிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக உற்பத்திகள் முன்னெடுக்கப்படும் போதுதான் அவற்றுக்கான சந்தைவாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி இவ்வாறான உற்பத்திகளுக்கு தொழில்நுட்பம் மட்டுமல்லாது துறைசார்ந்தோரது வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் பெறப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைசார்ந்த உற்பத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும் அந்தந்தப் பகுதிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .