2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

திருடன் மடக்கிப்பிடிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அராலி கிழக்கு ஆவராம்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் உண்டியலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை உடைத்துத் அதில் இருந்த பணத்தை திருட முற்பட்டவர் என்று கூறப்படுபவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த திங்கட்கிழமை (23) முடிவடைந்ததையடுத்தே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராலி கிழக்கைச்சோந்த 27 வயதுடைய நபரே மேற்படி சம்பவத்தின் போது மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன், இவர் ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மேற்படி ஆலயத்தில் இன்று புதன்கிழமை (25) அதிகாலை 12.30 மணியளவில் ஆலயக்கதவினை உடைத்த திருடன் ஆலயத்தின் உண்டியலினை உடைக்க முற்பட்டுள்ளான்.

இதன்போது, சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட ஆலயக் காவலாளி திருடனைத் துரத்திய போது திருடன் மதில் பாய்ந்து ஓடியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து ஆலய வீதிகளில் கடைகள் அமைத்திருந்தவர்கள் தப்பியோடிய திருடனை மடக்கிப்பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .