2025 ஜூலை 02, புதன்கிழமை

இரும்பு திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 25 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சிறுப்பிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரும்புகளை திருடி நீர்வேலியிலுள்ள இரும்புக் கடையில் விற்க முயன்றதாக கூறப்படும் இருவரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா செவ்வாய்க்கிழமை (24) உத்தரவிட்டார்.

புத்தூர் கலைமகள் வீதியினைச் சேர்ந்த 25 மற்றும் 19 வயதுடைய இவர்கள் இருவரும் இரும்பு திருடிய குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை (23) அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .