2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்பு தலைவர்களை சந்தித்தார்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி Admiral Dinesh K. Tripathi,திங்கட்கிழமை (22) அன்று இருவெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

Admiral Tripathi,இன்று காலை பாதுகாப்பு பிரதி அமைச்சரை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவரை அன்புடன் வரவேற்ற பிரதி அமைச்சர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு, இந்து சமுத்திர பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் பிற கடல்சார் குற்றங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் உட்பட பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுதல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை விரிவுபடுத்துதல், கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்தப்பின் பின்னர் இன்று பிற்பகல், ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ளபாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்.

இந்த சுமுகமான சந்திப்பின் போது, இருவரும் பல்வேறு இருதரப்பு விடயங்கள்குறித்து, குறிப்பாக இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல், பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இந்து சமுத்திர  பிராந்தியத்தில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுடன் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படுதல்,

சட்டவிரோத அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU)மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல், தகவல் பகிர்வு மற்றும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்புஇராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .