2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அளுத்கம, பேருவளை சம்பவம் திட்டமிடப்பட்ட செயல்: சி.வி

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

அளுத்கம, பேருவளைப் பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடானது திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையே என்றும் அந்த நடவடிக்கைகளை நடத்தியதில் பின்னணியொன்று இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது. 

இதன்போது உரையாற்றுகையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் - முஸ்லிம் சமூகம் இணைந்து செயற்படவேண்டும்.

1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகும். இந்த இனக்கலவரத்தினை மேற்கொள்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள், தமிழர்கள் தென்பகுதியில் எங்கெல்லாம் செறிந்து வாழ்கின்றனர். மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைகள் என்ன என்பது தொடர்பாக தகவல்கள் திரட்டினர்.

தொடர்ந்து, ஆராய்ந்த விடயங்களை வைத்து பார்த்தால்,  1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமையினைக் காரணம் காட்டி தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் முடுக்கிவிடப்பட்டது. அது, ஏற்கனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்' என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .