2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் மாநாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கட்சியின்  மாநாடு எதிர்வரும் ஜுலை  மாதம் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி பிரதேச பணிமனையில்  திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 'எதிர்வரும் 19ஆம் திகதி யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் யாப்பை  பரிசீலித்தல்,  மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஐக்கியத்தை  ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

20ஆம் திகதி தோழமைக் கட்சிகள் அனைத்தையும்; ஒன்றிணைத்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும். 

இம்மாநாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்சியின் பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .