2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பணம், நகை திருட்டு

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நவாலி வடக்கிலுள்ள வீடொன்றில் 3 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் திங்கட்கிழமை (30) முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தனர்.

வீடு காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் முன் கதவினைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியதாகவும், திங்கட்கிழமை (30) காலையில் வீட்டின் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை என்பன திருட்டுப் போயிருந்தமை தெரியவந்ததாகவும், உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .