2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மலசலகூடம் அமைப்பதற்கான முதற்பட்ட நிதி வழங்கல்

Super User   / 2014 ஜூலை 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  செல்வநாயகம் கபிலன்

 
வலி. கிழக்குப் (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 31 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சினால் முதற்கட்டமாக தலா 15000 ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் ம.பிரதீபன் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.
 
பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவிலும் இருந்து தலா ஒரு பயனாளிகள் வீதம் தெரிவு செய்யப்பட்டதுடன், விசேடமாக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட அக்கரைப் கிராமஅலுவலர் பிரிவில் 3 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
 
ஒவ்வொரு மலசலகூடம் அமைப்பதற்கு 85 ஆயிரம் ரூபா செலவாகும் எனக் கணிக்கப்பட்டு, மீள்குடியேற்ற அமைச்சினால் 60,000 ரூபா வழங்கப்படுவதுடன், மிகுதி 25 ஆயிரம் ரூபாவினை பயனாளிகள் செலவு செய்யவேண்டும்.
 
இதனடிப்படையில் அமைச்சினால் முதற்கட்ட நிதி வழங்கப்பட்டு மலசலகூடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .