2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விளையாட்டு உபகரணங்களை பெறுவதற்கு பதியுமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு  தமிழ்த்  தேசிய  கட்சி   அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

30 ஆண்டு  காலமாக  நடந்த  யுத்தம் காரணமாக  வடமாகாணத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் மிகவும் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றன.

அந்தவகையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் விளையாட்டுக்கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வந்தன.

அதனடிப்படையில் எமது கட்சியினர் புலம்பெயர் தமிழர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக ஜக்கிய ராச்சியத்தில் (U.K) வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள் எமது வேண்டுகோளை ஏற்று விளையாட்டுக்கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக  முதற்கட்டமாக யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் 25.07.2014 ம் திகதிக்கு முன்னர் இல-46 ,3ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள எமது கட்சித்தலைமையகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளா ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் அந்த  ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .