
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலர்களுக்கும் முற்போக்கு தமிழ்த் தேசியக்கட்சியின் உறுப்பினர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ். கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம், இரணைமடுக் குளத்தின் புனரமைப்பினால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், நன்மைகள் சம்மந்தமாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக தேசிய நீர் வழங்கல் சபையின் செயற்றிட்டப் பணிப்பாளர் தி.பாரதிதாசன் மற்றும் பாலசுப்ரமணியம் அவர்களும் ஏனைய உயர் அதிகாரிகளும் பேசிய போது,
யாழ். கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வுகள் இன்னும் மக்கள் மத்தியில் சரியாக சென்றடையாத காரணத்தால் தான் இன்னும் இவ்வேலைத்திட்டத்தை சரியாக அமுல்படுத்த முடியாது இருப்பதாகவும் மக்கள் சரியாக இதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்வார்களாயின் நாம் இத்திட்டத்தை மிக விரைவாக அமுல்படுத்த முடியும் என்பதுடன் இவ்வேலைத்திட்டம் இன்னும் காலதாமதமாக்கப்படுமாக இருந்தால் தமக்கு நிதி வழங்குகின்ற நிதி நிறுவனங்கள் இம்மாத இறுதிக்குள் நிதிகளை மீளப்பெறுகின்ற வாய்ப்பே மிக அதிகமாக இருப்பதனால் உடனடியாக வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாடு அவசியமாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந், மாவட்ட அமைப்பாளர் ஜே.ராஜ்குமார், இளைஞர் அணிச்செயலாளர் ஜே.ரிஷிக்கான் அவர்களும் கலந்து கொண்டனர்.
.JPG)