2025 ஜூலை 05, சனிக்கிழமை

பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் திருட்டு

A.P.Mathan   / 2014 ஜூலை 05 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை (05) அதிகாலை 3 மணியளவில் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 ½ பவுண் சங்கிலியினை அறுத்துச் சென்றுள்ளதாக குறித்த பெண்ணினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்தவேளை ஜன்னல் வழியாக கைநுழைத்து பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியினை இழுத்து அறுத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் பெண் தெரிவித்திருந்ததாகப் பொலிஸார் கூறினார்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .