2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வாள்வெட்டில் இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில்  குழுவொன்றினால் சனிக்கிழமை (05) இரவு  மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில், அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் மரணமடைந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவ்வாள்வெட்டினால் படுகாயமடைந்த 8 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

மீசாலை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றையதினம்  மாலை ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த குறித்த இளைஞரை சிகிச்சைக்காக   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோதே இவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

வாள்வெட்டிற்கு இலக்கான குறித்த  இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .