2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிவில் உடையிலிருந்த பொலிஸ் மீது தாக்குதல் : இருவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தரான எல்.ஹேரத் (28) என்பவர் மீது சனிக்கிழமை (05) மாலை தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குருநகரினைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (06) தெரிவித்தனர்.

குருநகரைச் சேர்ந்த போல் றொபினஷன் சுபீகரன் (31), போல் றொபின்ஷன் றொனால்டோ றீகன் (25) ஆகிய இருவருமே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்;.பாதுகாப்புப் படைகளின் ஏற்பாட்டின் கீழ், யாழில் சனிக்கிழமை (05) முதல் இடம்பெற்று வரும் எல்லேப் போட்டிகளுக்கு சிவில் உடையில் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த போதே, யாழ். பொது நூலகத்திற்கு எதிரே வைத்து மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .