2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரபாகரனை கூட நான் பழிவாங்க நினைக்கவில்லை: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

நான் யாரையும் பழி வாங்குபவன் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கூட பழிவாங்க முயற்சிக்கவில்லை'

இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் மேல் எனக்கு கோபம் இருந்துள்ளது. ஏன் என்றால் தனது தம்பியை கொன்றார். அதனைப் போன்று பொதுமக்களையும் கொன்றுள்ளார். அதனால்,  எனக்கு  கோபம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். 

யாழ். மாவட்ட பாரவூர்திச் சங்கத்தினருக்கும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு கோண்டாவிலில்  உள்ள  பாரவூர்திச் சங்க அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்றது.  இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்,  அவர் மீது அதிகமான கோபம் அவர் இறந்தபோதும் ஏற்பட்டது. ஏன் என்றால் இறுதிச் சண்டையில் அவர் சரணடைந்தமையால் ஆகும் எனவும் அவர் கூறினார்.

நான் யாரையும் அழிக்க இரத்தம் சிந்த கட்சியை நடத்தவில்லை. உங்களை அழைக்கவும் இல்லை. நான் அழைப்பதெல்லாம் உங்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. இதற்கு நீங்கள் எனக்கு பலம் சேர்க்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .