2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலி. தென்மேற்கில் கிணறுகளுக்கு குளோரின் இட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ். வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிணறுகளுக்கு குளோரின்; இடுவதற்காக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஜுன்  மாதம் 30ஆம் திகதி 1,000  கிலோ குளோரின் வழங்கப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் ச.சிவகுமார் நேற்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி, சாவற்கட்டு ஆகிய கிராமங்களில் வயிற்றோட்டம் உள்ளிட்ட தொற்றுநோய்கள் கடந்த ஜுன் மாதம் பரவியிருந்தது. இதனால், அப்பகுதிகளிலுள்ள கிணறுகளுக்கு குளோரின் இட வேண்டும் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தங்களிடம் கோரியததாகவும் அவர் கூறினார்.

இந்தக் கோரிக்கைக்கு அமைய பிரதேச சபையின் நிதிக் குழுவில் ஆராயப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டதை தொடர்ந்து, 1,000  கிலோ குளோரின் வழங்குவதற்கு பொதுச்சபை அங்கீகாரம் வழங்கியது. இந்த நிலையில்,  குளோரின் கொள்முதல் செய்யப்பட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .