2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

  விவகாரத்துப் பெற்ற பெண்ணொருவருக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த பெண்ணொருவருக்கும் குறித்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வல்வெட்டித்துறையில் கடந்த முதலாம் திகதி சம்பந்தக் கலப்பு இடம்பெற்றது.

அதன்பின்னர் அந்தபெண் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்துபெற்றவர் என்று  தன் நண்பர்கள் மூலம் தெரியவரவே அப்பெண்ணைத் திருமணம் செய்யமாட்டேன் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

.இந்நிலையில், சம்பந்தக்கலக்கப்பட்டவரின் வீட்டிற்கு கடந்த 2ஆம் திகதி வந்த சிலர் அவரை அச்சுறுத்தி திருகோணமலைக்கு அழைத்துச் சென்று அங்கு, அவருக்கும் அப் பெண்ணுடன் பதிவுத் திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் வல்வெட்டித்துறைக்கு நேற்று (07) மீண்டும் வந்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அந்தத் திருமணத்தினைச் செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .