2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீதிமன்றக் கட்டடத்தின் கூரையின் மீதேறி போராட்டம் நடத்தியவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 09 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேநபரான செல்வரத்தினம் நிரோசன் (30) தன்னைக் கைது செய்ய வேண்டாம் என கோரி, நீதிமன்ற கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை, வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இலாவமாகப் பேசி அவரை கூரையிலிருந்து கீழிறக்கியே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும்; தெரியவருவதாவது,

குறித்த நபருக்கு எதிராக களவு, கொள்ளை, நகைகள் அறுப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ்  மானிப்பாய், வட்டுக்கோட்டைப் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவருக்கு எதிராக இரண்டு பொலிஸ் நிலையப் பொலிஸாரும் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். எனினும் குறித்த நபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. இதனையடுத்தே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணையின் பிரகாரம் குறித்த நபர், சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, மானிப்பாய் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும்  வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கிற்காக அவரை கைது செய்வதற்கு நீதிமன்றத்திற்கு வெளியே வட்டுக்கோட்டைப் பொலிஸார் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் பிணையில் வெளியேவந்த குறித்த நபர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் நீதிமன்ற கட்டடத்தின் கூரையின் மீதேறி தன்னைக் கைது செய்ய வேண்டாம் எனவும், சிறையென்றால் தனக்கு பயம் என்றும் தன்னை கைது செய்யவேண்டாம் என்று கூறியும்  போராட்டத்தில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .