2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘மாணவர்களுக்குப் புறச்சூழல் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது’

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

“மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளையோ அவர்களது வளர்ச்சியையோ தடைசெய்யும் வகையில் எந்தவொரு புறச்சூழல்களுக்கும் இடமளிக்க கூடாது” என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் தெரிவித்தார்.

யா.அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் நிறுவனர் தினமும் 2014 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வும் புதன்கிழமை (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மாணவர்களின் புலன்களை வெவ்வேறு செயற்பாடுகளில் இழுத்துச் செல்லத்தக்க பல்வேறான பொழுதுபோக்கு அம்சங்களும் செயற்பாடுகளும் எமது பிரதேசங்களில் அதிகரித்துள்ளன.

பெற்றோர் தமது பொழுதுபோக்கிற்காக நேரத்தை விரயமாக்குவதை விடுத்து தமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகளில் பங்கெடுத்து அவர்களிற்கு ஊக்கமும் ஆதரவும் வழங்குவதனூடாக தமது பிள்ளைகளினை கல்வியில் சிறந்த ஓர் நற்பிரஜைகளாக்க முடியும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற இன்னல்கள் காரணமாக எமது பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், குடும்பங்களின் பொருளாதாரம் போன்றவை வலுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் அவற்றினால் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் முடக்கப்படாமல் முன்னேற்றகரமான பாதையில் செல்ல வேண்டும் என்பதுடன் கல்வித் தேவைகளிற்கான அனைத்து வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்.

கிராமிய பாடசாலைகள் வளங்கள் குறைந்தவையாகவே காணப்படுகின்றன. இதனால் அவற்றின் தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆகவே, கல்வி பயிலும் மாணவ சமுதாயமானது, சகல வசதிகளையும் பெற்று சகல துறைகளிலும் வெற்றிவாகை சூடி தமது பெற்றோரிற்கும் பாடசாலைகளிற்கும் புகழைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .