2025 ஜூலை 05, சனிக்கிழமை

விசாரணையின்போது எம்மை கூறியமை வேதனையளிக்கிறது: டக்ளஸ்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழுவின் விசாரணையின் போது எமது கட்சியைக் குறிப்பிட்டு பெண்ணொருவர் கூறிய கருத்துக்கள் எமக்கு வேதனையளிக்கின்றது” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தி உண்மையாயின் அக்கூற்றின் உண்மைத்தன்மையை வெளிக் கொணர்வதற்கு அச்சாட்சியினை குறுக்கு விசாரணை செய்ய எனது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா? என்பதை எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் விசாரணைக்கு குழுவுக்கு கோரிக்கை விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“2006 ஆம் ஆண்டு அரியாலை பிரதேசத்தில் அப்பெண்மணி வசித்து வந்ததாகவும், அப்போது வெள்ளைவேனில் வந்த இனந்தெரியாதோர் தனது கணவரை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

அப்போது ஆணைக்குழுவினர் அந்தப் பெண்மணியிடம் உங்கள் கணவர் கடத்தப்பட்ட பகுதியை அந்தக் காலப்பகுதியில் நிர்வாகம் செய்து கொண்டிருந்தது இராணுவமா? தமிழீழ விடுதலைப் புலிகளா? என்று கேட்டபோது, சாட்சியமளித்த அந்தப் பெண்மணி, அந்தப் பகுதியை ஈ.பி.டி.பியினரே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஈ.பி.டி.பி அரசியல் விவகாரங்களில் செயற்படும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். எமது கட்சி எக்காலத்திலும், எந்தப்பிரதேசத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. ஆகையினால் அந்த சாட்சியினால் (8.07.2014) அன்று கூறப்பட்ட வாக்கு மூலமானது உண்மைக்குப் புறம்பானதாகும்”  என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .