2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுமி மீது வல்லுறவு: ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

யாழ்.நெல்லியடி இராஜகிராமம் பகுதியினைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை ஞாயிற்றுக்கிழமை (13) மாலை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதேயிடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனகலிங்கம் ஜெமினஸ் (26) என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“மேற்படி சிறுமி அருகிலுள்ள சரஸ்வதி வித்தியாலயத்தில் குடிநீர் எடுப்பதற்காக தனது தம்பியுடன் சென்றுள்ளார். அவ்வேளை அங்கு நின்றிருந்த மேற்படி நபர், சிறுமியின் தம்பிக்கு மாம்பழத்தினைக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, சிறுமியினை அச்சுறுத்தி வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் மேற்படி நபரை பிடித்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நபர் ஏற்கனவே, இரண்டு பெண்களைத் திருமணம் செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .