2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆடுகளைத் திருடியவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த யாழ்ப்பாணம், துன்னாலை, குடவத்தையினைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்ததாக நெல்லிடியப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை கரவெட்டி பகுதியிலுள்ள வீதியொன்றில் வைத்து ஆடுகளை விற்பனை செய்துகொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், திருடப்பட்ட 3 ஆடுகளையும் மீட்டனர். கைதான சந்தேகநபரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .