2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நெல்லியடி, இராஜகிராமம் பகுதியினைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவரை துஷ;பிரயோகத்துக்கு உட்படுத்திய 26 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அவ்விறிக்கையையும் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது தம்பியுடன் குடிநீர் எடுப்பதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலையொன்றுக்கு மேற்படி சிறுமி சென்றுள்ளார். இதன்போது அங்கு நின்றிருந்துள்ள சந்தேகநபர், சிறுமியின் தம்பிக்கு மாம்பழமொன்றைக் கொடுத்து ஏமாற்றியுள்ளதுடன் சிறுமியை கத்தி முனையில் மிரட்டி அருகிலுள்ள பற்றைக்குள் இழுத்துச் சென்று துஷ;பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன்போது, அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பிரதேசவாசிகள், சந்தேகநபரைப் பிடித்து நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேற்படி சந்தேகநபர், ஏற்கனவே இருமுறை திருமணம் முடித்தவர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரித்த நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .