2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தாருண்யட்ட ஹெடக் நிறுவனத்தின் புலமைப்பரிசில் கருத்தரங்கு

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷவை தலைமையாகக் கொண்ட தாருண்யட்ட ஹெடக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தரம் - 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் யாழில் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணக் கல்வி வலய மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், வலிகாமம் கல்வி வலய மாணவர்களுக்கு இணுவில் இந்துக் கல்லூரியிலும் இந்தக் கருத்தரங்குகள் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றன.

இக்கருத்தரங்கு நிகழ்வில் தாருண்யட்ட ஹெடக் நிறுவன திட்ட இணைப்பாளர்களான ஜி.ஜி.பிரதீப் புஸ்பகுமார, றொசான் ஜெயதிலக ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

தொடர்ந்து, வடமராட்சிக் கல்வி வலய மாணவர்களுக்கு பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியில் நாளை வியாழக்கிழமையும் (17) தென்மராட்சிக் கல்வி வலய மாணவர்களுக்கு சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமையும் (18) இடம்பெறவுள்ளன.
 
அத்துடன் தீவகக் கல்விவலய மாணவர்களுக்கான கருத்தரங்கு நயினாதீவு மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறவுள்ளது.

தாருண்யட்ட ஹெடக் நிறுவன ஏற்பாட்டில் இடம்பெறும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு 2009ஆம் ஆண்டிலிருந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .