2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நல்லுண்ணி வீதி புனரமைப்பில் இழுபறி

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

நெல்சிப் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 7.9 மில்லியன் ரூபா நிதியினை பிரான்பற்று நல்லுண்ணி வீதியினை புனரமைப்பதற்கு பயன்படுத்த முடியாமல் இழுபறி நிலையிலிருப்பதாக வலி.தெற்மேற்குப் பிரதேச சபைத் தவிசாக்ளர் ச.சிவகுமார் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

வலி.தென்மேற்குப் பிரதேசத்திலுள்ள 05 வீதிகள் நெல்சிப் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டன.  இந்த  5 வீதிகளும் புனரமைப்புச் செய்த பின்னர், 7.9 மில்லியன் ரூபா நிதியானது எஞ்சியநிலையில் காணப்படுகின்றது.

இதனையடுத்து, திருத்தப்பட்ட 5 வீதிகளுடன் தொடர்புபட்ட பிரான்பற்று - நல்லுண்ணி வீதியினை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் சபையின் அனுமதி பெறும் கூட்டம் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றபோது, சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்படி வீதியினைத் திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களுடைய பிரதேசங்களிலுள்ள வீதிகளினை திருத்துமாறு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், மேற்படி நிதியினைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்நிதியினைப் பயன்படுத்தி எந்த வீதியினைப் புனரமைப்பது என்பது தொடர்பான கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது, சபை உறுப்பினர்கள் உடன்பாட்டிற்கு வராதுவிட்டால் மேற்படி நிதியானது திரும்பிச் செல்லும் நிலையேற்படும் என தவிசாளர் தெரிவித்தார்.

இதனால், சபை உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு, குறித்த நிதியினை உறுப்பினர்கள் அனைவரின் ஒருமித்த சம்மதத்துடன் தெரிவு செய்யப்படும் ஒரு வீதியினை புனரமைப்புச் செய்வதற்கு பயன்படுத்தவேண்டும் என தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .