2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தண்ணீருக்கான போராட்டம் இடமாற்றம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, பொ.சோபிகா


முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (17) நடத்த ஏற்பாடாகியிருந்த போராட்டம், யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலுக்கு முன்னால் நடத்தப்பட்டது.

இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்வதற்கான 'தண்ணீருக்கான உரிமைப் போராட்டமே' இல்லாறு இடமாற்றம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்காத காரணத்தினாலேயே மேற்படி போராட்டம் இடமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்போக்குத் தமிழ்;த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 'ஓயமாட்டோம், ஓயமாட்டோம் தீர்வு கிடைக்கும் வரையில் ஓயமாட்டோம்', 'வடமாகாண சபையே எங்களுக்குப் பதில் சொல்', 'அமுல்படுத்து அமுல்படுத்து இரணைமடுத் திட்டத்தினை அமுல்படுத்து', உள்ளிட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .