2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காற்றினால் கிளிநொச்சியில் வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வீசி வரும் காற்றினால் தற்காலிக வீடுகளில் வசிப்போரின் 20இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவேகானந்த நகர், சிவபுரம், பன்னங்கண்டி, உமையாள்புரம் ஆகிய கிராமங்களிலுள்ள தற்காலிக வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுக்குரிய நிவாரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 260 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். இவர்களில் 8 ஆயிரம் வரையிலான குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால், தொடர்ந்து காற்று வீசினால் சேதமடையும் வீடுகளில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .