2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.றொசாந்த்


இலங்கையிலேயே வடமாகாணத்தில் மட்டுமே உள்ளக பயிற்சியினை மேற்கொள்ளும் வைத்திய மாணவர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலைமை காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பதமநாதன் சத்தியலிங்கம் நேற்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இதற்கு காரணம், வடபகுதி வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதே ஆகும். ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை சேவைக்கு அமர்த்துவதற்கும் மாகாண சபையில் பணம் பற்றாகுறையாகவுள்ளது.

வடமாகாண சபைக்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மக்களுக்கு கூறுகின்றன. வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் மில்லியன் ரூபாயில் ஆயிரம் மில்லியன் ரூபாய் பணமே வடமாகாண சபையின் ஊடாக செலவளிகப்படுகின்றன.

மிகுதி 4 ஆயிரம் ரூபாய் பணமும் மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவே செலவு செய்யப்படுகின்றன. 

ஏனையவை திட்டங்களின் ஊடாகவும் புலம்பெயர்ந்தவர்களினால் வழங்கப்படும் நிதி மூலமே செயற்படுத்தப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .