2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இழந்த பழமைகளை பாதுகாக்க வேண்டும்: சரவணபவன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண மக்கள் யுத்தத்தில் எல்லாவறையும் இழந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இழந்த பழமையானவற்றை மீண்டும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நேற்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைய கூடிய வகையிலே மண்டைதீவு பிரதேசம் காணப்படுகின்றது. இங்கு தொழிற்சாலை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள ஏதுவான இடமாக காணப்படுகின்றது. இங்கு, பறவைகள் சரணாலயம் அமைப்பதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும்.

யுத்தத்தினால் வடக்கு மக்கள் எல்லாவற்றையும் இழந்து தமது பழமைகளையும் இழந்துள்ளார்கள். இனி வரும் காலங்களில் அவர்கள் இழந்த பழமைகளை தேடி சேகரிக்க வேண்டிய முக்கிய கடைப்பாடு உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .