2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரான்பற்று, ஆனைக்கோட்டை எண்ணெய் உற்பத்தி கூட்டுறவாளர் சங்கங்களுக்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரான்பற்று, ஆனைக்கோட்டை எண்ணெய் உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவாளர் சங்கங்களின் தொழிற்துறைகளை மேம்படுத்தும் வகையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (18) இடம்பெற்றது.

இதன்போது, குறித்த இரண்டு சங்கங்களின் ஊடாகவும் எள் சார்ந்த உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக தொழிற்துறை சார்ந்தோர் அமைச்சருடன் கலந்துரையாடினர்.

அதனடிப்படையில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மூலப்பொருளான எள்ளை தென்பகுதியில் இருந்து கொள்வனவு செய்து அவற்றை தொழிற்துறையாளர்களுக்கு வழங்குவதற்காக, வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதற்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் இரண்டு சங்கங்களுக்கும் அமைச்சர் நிதியுதவி வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரும் உடனிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .