2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காரைநகர் ஊரி கிராமத்திற்கு விவசாய அமைச்சினால் குடிநீர்

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.காரைநகர் ஊரிக் கிராமத்திற்கு வடமாகாண விவசாய அமைச்சின் மூலம் நாளாந்தம் இரண்டு பவுஸர்களில் குடிநீர் விநியோகிக்கப்படும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மேற்படி கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் அன்றாட தேவைகளினை நிவர்த்தி செய்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடற்படையினரின் ஆளுகைக்குட்பட்ட மேற்படி கிராமத்தில் அண்மையில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அந்தக் கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கிராமத்தின்  நிலைகள் பற்றி அறிந்துகொண்டேன். கடற்படையுடன் மக்கள் அண்டி வாழ்வதானாலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமையினை அறியக்கூடியதாகவிருந்தது.

இதனால், அம்மக்களின் அடிப்படைத் தேவைகளை நாங்கள் நிறைவேற்றும் தருணத்தில் அவர்கள் கடற்படையினரை நம்பி வாழத் தேவையில்லை.  அதனடிப்படையில், அம்மக்களின் முக்கிய தேவையாக இருக்கும் குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஞாயிற்றக்கிழமை (20) முதல் அம்மக்களுக்கான குடிநீர் இரண்டு பவுஸர்களில் விநியோகம் செய்யப்படவுள்ளன.

குடிநீரின் தேவை அதிகரித்தால் 3 பவுஸர்களில் குடிநீரினை விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .