2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நல்லூர் ஆலயத் திருவிழாவிற்கான பணிகள் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, மஹோற்சவ காலத்தில் பிரதட்டை அடிப்பவர்களுக்கு ஏதுவாக ஆலய சூழலிருந்த பழைய மணல் அகற்றப்பட்டு, புதிய மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றது.  

மேலும், ஆலயத்தின் நான்கு திசைகளிமுள்ள வீதிகளில் நிழல் பந்தல்களும் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .