2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுங்கள்: மாவை

George   / 2014 ஜூலை 20 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இலங்கையில் சர்வதிகார ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது மாநாடு 'வலுவான ஜக்கியத்தினை நோக்கி' என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை (19) முதல் யாழில் இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளினை ஒன்றிணைத்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது, அங்குஉரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

முள்ளுக்கம்பி வேலிக்கு பின்னால் நின்றிருந்தும் எமது மக்கள் ஜனாதிபதிக்கு எதிராகப் போராடினார்கள். மேலும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தார்கள்.
அதனைவிட மாகாண சபைத் தேர்தலிலும், அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக எமது மக்கள் வாக்களித்தனர்.
 
எங்கள் தேசத்தில் நாங்கள் வாழவும் ஆளவும் வேண்டிய அரசியற் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.
மேலும், சர்வதே ஆதரவினை நாம் எப்பொழுதும் இழந்துவிடக்கூடாது.

ரஷ்ய – உக்ரைன் மோதலில் எமக்கான சர்வதேச வாய்ப்புக்கள் கைநழுவிப் போய்விடுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .