2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா செல்ல முயன்றவரை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஜூலை 22 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்வெட்டித்துறை கடலினூடாக இந்திய செல்ல முயன்ற இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்பவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர்.

மீனவர்களுடன் சேர்ந்து படகொன்றில் இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர், திங்கட்கிழமை (21) பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது மேற்படி நபர், தான் இந்திய நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்தவர் என்றும் தனது சொந்த ஊரிற்குச் செல்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்படி நபரை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கும்படி நீதவான் பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய மேற்படி நபரை திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியா நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்த மேற்படி நபர் 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, வல்வெட்டித்துறையிலுள்ள தேநீர் கடையொன்றில் பணியாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .