2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காதலிக்குமாறு அட்டகாசம் புரிந்த நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., இணுவில்,  மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதேயிடத்தினைச் சேர்ந்த 20, 23, 24 மற்றும் 26 வயதுடைய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி 4 இளைஞர்களில் ஒருவர் மேற்படி யுவதியினைக் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அதற்கு அந்த யுவதி மறுப்புத் தெரிவித்த நிலையில், அவ்விளைஞனைக் காதலிக்க வற்புறுத்தியே மேற்படி இளைஞர்கள் கலாட்டாவில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்படி 4 இளைஞர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .