2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

தமிழகத்தின் கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 5 படகுகளில் வந்த மேற்படி மீனவர்களை கடற்படையினர் கைது செய்து, யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, நீரியல் வளத்துறையினர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .