2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கோபுர அடிக்கல் நாட்டுவிழா

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நாட்டி வைத்தார்.

மேற்படி இராஜகோபுரம் அமைப்பதற்கு வடமாகாண ஆளுநர், 10 இலட்சம் ரூபாவினை ஆலய தர்மகர்த்தாவிடம் நேற்று திங்கட்கிழமை (21) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இதனையடுத்து, வடமாகாண ஆளுநரும் அவருடைய பாரியாரும் கலந்துகொண்டு, விசேடபூசை வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி இராஜகோபுரப் பணியானது பல கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .