2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நாய்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மாநகர சபையும், விலங்குகள் நலன்தொடர்பிலான 4 அமைப்புக்களும் இணைந்து மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாய்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையினை இன்று செவ்வாய்க்கிழமை (22) முதல் ஆரம்பிக்கப்பட்டதாக மாநகர கால்நடை வைத்தியதிகாரி தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றல், நாய்களுக்கான கருத்தடை செய்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, வீதிகளில் திரியும் நாய்கள் வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி ஏற்றல் மற்றும் பெண் நாய்களுக்கான கருத்தடை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .