2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தடை செய்யப்பட்ட வலைகளைப் பறிக்கச் சென்றவர்கள் துரத்தியடிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்ப்பாணம், கிளாலி, சங்குப்பிட்டிக் கடல்நீரேரிகளில் தடை செய்யப்பட்ட கூடு வலையினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற நீரியல்வளத்துறை அதிகாரிகளை 20இற்கும் மேற்பட்ட மீனவர்கள் பொல்லுகளால் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறி அச்சுறுத்தியதாக கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பூநகரி மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நீரியல் வளத்துறையினர் தெரிவித்தனர்.

மேற்படி கடற்பகுதியில் கூடு வலையினைப் பயன்படுத்தி இறால் பிடியில் ஈடுபடுவதாக தகவல் அறிந்து, இரண்டு படகுகளில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் அப்பகுதி கடலுக்குச் சென்றனர்.

இதன்போது, அங்கு நின்றிருந்த 20இற்கும் மேற்பட்ட மீனவர்கள், அதிகாரிகளைக் கடமை செய்யவிடாது தடுத்ததுடன் பொல்லுகளால் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டியதாக நீரியல் வளத்துறையினர் தெரிவித்தனர்.

மேற்படி கூடு வலை போட்டு இறால் பிடியில் ஈடுபடுவதினால், இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் சிறிய மீன் இனங்களும் அழிவடையும் ஆபத்து உள்ளதாக நீரியல் வளத்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .