2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குழு மோதலில் ஏழு பேர் படுகாயம்

Kogilavani   / 2014 ஜூலை 24 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்.இளவாலை வசந்தபுரத்தில் வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் 7 பேர் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலை, வசந்தபுரத்தைச் சேர்ந்தவர்களான மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (32 வயது), மகேந்திரன் அசோக்குமார் (30 வயது), மகேந்திரன் இராஜ்குமார் (28 வயது), மார்க்கண்டு கருணானந்தன் (21 வயது), ஆனந்தராசா கபிலன் (23 வயது), பூதப்பிள்ளை சுரேஸ்குமார் (31 வயது),இந்திரஜித் தவனேசன் (32 வயது) ஆகிய 7 பேருமே படுகாயமடைந்துள்ளனர்.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினைத் தொடர்ந்து, வசந்தபுரத்தில் இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அவ்விடத்திற்குச் சென்று குழுச் சண்டையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .