2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆடிஅமாசை பிதிர்க்கடனுக்கு கீரிமலையில் ஏற்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றவரும் பொதுமக்களின் நலன்கருதி அனைத்து ஏற்பாடுகளும் கீரிமலையில் செய்யப்பட்டுள்ளதாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

ஆடி அமாசை தினம் எதிர்வரும் சனிக்கிழமை (26) அனுஷ;டிக்கப்படவுள்ளது. இத்தினத்தில் கீரிமலைக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

இதனால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட வசதிகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரையிலும் சிற்றூர்திகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஆகியனவும் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துச் சபையினர் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவின் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதுடன், கடலில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடலில் கடற்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .