2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மதுபோதையில் இடையூறு விளைவித்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., ஊர்காவற்றுறைப் பகுதியில் மதுபோதையில் வீதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த நாரந்தனையினைச் சேர்ந்த மூவரை நேற்று வியாழக்கிழமை (24) கைது செய்ததாக ஊர்;காவற்றுறைப் பொலிஸார் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தனர்.

மேற்படி மூன்று நபர்களும் பிரதான வீதியில் நின்றிருந்து வீதியினால் சென்று வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததினையடுத்து அவ்விடத்திற்குச் சென்று மூவரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .