2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொலை வழக்குச் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்., கோண்டாவில் பகுதியில் ஜுன் மாதம் 16ஆம் திகதி வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த உரும்பிராய் சிவகுல வீதியினைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் (24) என்ற சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

ஜுன் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தின் எதிரொலியாக உரும்பிராய்ப் பகுதியில் 7 வீடுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஜுன் 23ஆம் திகதி மதியம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .