2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

16 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்டார்.

யாழ் நாகர்கோயில் தெற்கு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், பருத்துறைப் பொலிஸார் மேற்படி இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அவர், பின்னர் தனக்கு வெளிநாட்டில் திருமணம் நிச்சயமாகியுள்ளது என்று கூறி சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் நேற்று சனிக்கிழமை (26) சிறுமி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே, மேற்படி இளைஞன் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை, இன்று ஞாயிற்றுக்கிழமை (27) யாழ் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவானின் வாஸஸ்த்தலத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் காதல் வயப்பட்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .