2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலுள்ளவர்கள்  நேற்று திங்கட்கிழமை (28)  பகல் வெளியில் சென்றிருந்தபோது இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

வீட்டின் பின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தவர்கள்  24 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளையும்  45,000 ரூபாய் பணத்தையும்  கொள்ளையடித்துச் சென்றதாக சுன்னாகம் பொலிஸார்  இன்று செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம்  தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்  முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .