2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'விளையாட்டுக்களில் இனவாதம் கலந்துவிட்டதாக அச்சம்'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்ட விளையாட்டுக்கள் என்றாலே அதில் இனவாதம் கலந்துவிட்டதோ என்று அச்சமடையத் தோன்றுகின்றது என  சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்  க.உஷாந்தன்  தெரிவித்தார்.

வலி. தென் மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 26ஆவது மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழகம் சார்பாக பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மானிப்பாய் பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு முக்கியம். இது  வீரர்களை உற்சாகப்படுத்துவதோடு, அடுத்த இலக்குகள் நோக்கி நகர வைப்பவை.
பல நற்பண்புகளை எம்மிடத்தே பழக்கப்படுத்தும் விளையாட்டுப் போட்டிகளுக்குள்ளும் இனவாதம் புகுந்துவிட்டதோ என்று எண்ணும் காலம் வந்துவிட்டது. அண்மையில் கம்பஹாவில் வைத்து யாழ். மாவட்ட இளைஞர் துடுப்பாட்ட அணி வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகாத மனிதப் பண்புகள் அற்ற நடவடிக்கைகள் இதையே காட்டுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதுடன், தண்டிக்கப்படவும் வேண்டியவை.

தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டம் பார்வையாளர்களாக இருந்த காலம் போய் பதக்கங்கள் பெறுகின்ற நபர்களாக மாறியுள்ள காலம் வந்துவிட்டது,

இனவாத நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கலாம். அதற்காக எமது வெற்றிகளை நாம் இழந்துவிட முடியாது. வெற்றிகள் என்பதற்கு அப்பால் விளையாட்டு உணர்வுகளை மதிப்பவர்களாக என்றைக்கும் நாங்கள் இருக்க வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .